பலரின் ” கனவு வாகனமாக ” இருக்கும் கார்கள் பட்டியலில் ” ஜீப் ” ற்கு முக்கிய பங்கு உண்டு ..
ஜீப் இந்தியா நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. மாடலுக்கு “மெரிடியன் “என பெயர் வைத்துஉள்ளது அந்நிறுவனம் .எராளமான அம்சங்கள் உடன் முழுமையாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்யபடும் இந்த கார் இந்தாண்டு மத்தியில் சந்தைக்கு வரவுள்ளது.
இந்தியாவின் பறந்துவிரிந்துருக்கும் கலாச்சாரங்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்த காரின் தோற்றோம் , பாதைகளை குறிப்பதால் மெரிடியன் என்னும் பெயர் தேர்வு செய்யப்பட்டது என அந்நிறுவனம் தெரிவித்துஉள்ளது.இந்திய சந்தையில் ‘மெரிடியன்’ தான் ஜீப் நிறுவனத்தின் முதல் 7 சீட்டர் மாடல் ஆகும். இந்தியாவில் உள்ள அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் இந்த எஸ்.யு.வி. மாடலுக்கான சோதனை நடைபெற்றது.
இந்த புதிய மாடலின் ‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி’ வரையிலான சோதனை ஓட்டத்தின் முடிவுகள் சிறந்ததாக உள்ளது என ‘ஜீப் இந்தியா’ தலைவர் நிபுன் ஜெ மஹாஜன் தெரிவித்தார். இந்த மாடலில் 2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனும் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களில் 4WD ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் 10.25 இன்ச் மெயின் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், பானரோமிக் சன்ரூஃப். 4-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், முன்புறம் வெண்டிலேட் செய்யப்பட்ட சீட்கள் வழங்கப்படலாம். இந்திய சந்தையில் ஜீப் மெரிடியன் மாடலின் விலை ரூ. 35 லட்சத்திற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது .
இதற்குமுன் , இந்த காரின் சோதனை ஓட்டத்தின் போது ..எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.