இயல்பு நிலைக்கு திரும்பும் இந்திய விமான சேவை

292
Advertisement

கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி பரவலாக்கப்பட்டுள்ளது. மீண்டும் சர்வதேச விமான சேவையை தொடங்குவது குறித்து பங்குதாரர்களுடனும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகளுடனும் ஆலோசனை நடத்தினோம்.இதனடிப்படையில் வர்த்தக ரீதியிலான சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஆதலால் வரும் மார்ச் 27-ம்தேதிமுதல் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை தொடங்கும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும்,விமான பயணத்தின்போது மத்திய அரசின் சுகாதாரத்துறை வகுத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, பயணிகள் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.