பொக்ரானில் 7-ந் தேதி போர் விமானங்கள் சாகசம் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்

350
Advertisement

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டம் பொக்ரானில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘வாயு சக்தி’ என்ற விமானங்கள் சாகச நிகழ்ச்சியை இந்திய விமானப்படை நடத்தி வருகிறது.அதன்படி வருகிற 7-ந் தேதி
இந்நிகழ்ச்சியை இந்திய விமானப்படை நடத்துகிறது. சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

காலை 10.30 மணி முதல் பகல் 12.30 மணிவரை இந்தியா விமானப்படை விமானங்கள் சாகசம் புரியபோகின்றன.இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 148 விமானங்கள் பங்கேற்கின்றன. இதில் 109 போர் விமானங்கள் , 24 ஹெலிகாப்டர்கள், 7 சரக்கு விமானங்கள் ஆகியவையும் ,ஜாக்குவார், சுகோய்-30, மிக்-29, தேஜாஸ், ரபேல், மிராஜ்-2000 ஆகிய விமானப்படை விமானங்களும் பங்கேற்கின்றன. ‘வாயு சக்தி’ நிகழ்ச்சியில், ரபேல் விமானம் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.