மக்களவையில் நேற்று சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டிதனது பதிலுரையில் உள்நாட்டு சுற்றுலா ஊக்குவிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது 15 சுற்றுலா தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் நமது நாட்டில் கொரோனாவுக்கு முன் சுற்றுலாத்துறையில் 3.8 கோடி பேர் பணியாற்றி வந்ததாகவும் ஆனால் கொரோனாவின் 3 அலைகள் காரணமாக சுமார் 2.15 கோடி பேர் வேலை இழந்து உள்ளதாகவும்
இந்த துறையை மீட்டெடுக்க பயண ஏஜென்டுகள் மற்றும் சுற்றுலா பொறுப்பாளர்களுக்கு ரூ.10 லட்சம் வரையும், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ரூ.1 லட்சம் வரையும் வட்டியில்லா கடன் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதோடு சர்வதேச சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் முதல் 5 லட்சம் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கிஷன் ரெட்டி கூறினார்.