கரூரில் கடந்த வாரம் தொடங்கிய வருமான வரித்துறை சோதனை, பல்வேறு இடங்களில் 5வது நாளாக இன்றும் தொடர்கிறது….

73
Advertisement

கரூரில் அமைச்சர் செந்தில் பாலஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில்,

வருமான வரித்துறை சோதனை கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. தினமும் புதிய இடங்களிலும், சோதனை தொடங்குவதால், மாவட்டத்தில் சோதனை நடைபெறும் இடங்களில் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கிய சோதனை, தொடர்ந்து 5வது நாளை பல்வேறு இடங்களில் இன்றும் நடைபெற்று வருகிறது. தற்போது சுமார் 10 இடங்களில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை, மேலும் ஓரீரு நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் முக்கிய உதவியாளரின் கடலூரில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அதே நாளில் மக்கள் நீதி மய்யம் பொருளாளர் சந்திரசேகரன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். முன்னதாக, திமுகவின் கே.எஸ்.தனசேகர் மற்றும் ம.தி.மு.க.வின் கவின் நாகராஜ் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.