திருவாரூர் அருகே சொத்து தகராறில் அண்ணன் மகளை உறவினர் கத்தியால் குத்தி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது…

21
Advertisement

முத்துப்பேட்டை அருகில் உள்ள பின்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கணேசன்-ராதிகா தம்பதி. 

இந்நிலையில், ராதிகாவின் தம்பி வெளிநாடு செல்வதற்காக வாங்கியுள்ள கடனை திருப்பி செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் தனது தந்தைக்கு சொந்தமான இடத்தை விற்று கடனை அடைக்குமாறு தனது அக்காவிடம் கூறியுள்ளார். அப்போது, ராதிகா அந்த இடத்தை தானே வாங்கிக் கொள்வதாக கூறி இடத்தை வாங்கி உள்ளார். தில்லைவிளாகம் பகுதி அருகில் வசித்து வரும் ராதிகாவின் உறவினர் ஞானபிரகாஷ் என்பவர் இந்த இடத்தை தன்னிடம் விற்றிருக்கலாம் என்று கூறி ராதிகாவிடம் தகரறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த இடத்தை பார்ப்பதற்காக ராதிகா சென்ற போது ராதிகாவிற்கும் ஞானபிரகாஷிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஞானப்பிரகாஷ் கத்தியால் ராதிகாவின் கழுத்தில் சரமரியாக தாக்கினார். இதில், படுகாயம் அடைந்த ராதிகாவை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.