இத மட்டும் தெரிஞ்சுகிட்டா இனி பேரிக்காய் சாப்பிடாம இருக்க மாட்டீங்க..!

229
Advertisement

பேரிக்காயில் அதிக மருத்துவ குணங்கள் உண்டு. ஜீரண ஆரோக்கியம், இதய ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல் இதில் வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. கிளைசிமிக் இண்டக்ஸில் இது குறைவாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாம்.

பேரிக்காயில், உள்ள நார்சத்து, ஒரு நாளைக்கு தேவையான அளவில் 24 % இருக்கிறது. இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின் சி, காப்பர் இருப்பதால் உடலை சேதமடைவதில் இருந்து பாதுகாக்கிறது.பேரிக்காயில் இருக்கும் நார்சத்து, பொட்டாஷியம் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதனால் இதய நோய் ஏற்படாது. ரத்த அழுத்தத்தை சீராக வைத்துகொள்ள உதவுகிறது.

மேலும் குறைந்த கலோரிகள் இருப்பதாலும் , நார்சத்து இருப்பதாலும் உடல் எடை குறைக்க உதவும். இதை சாப்பிடுவதால் நாள் முழுவதும் வயிறு நிறம்பி இருப்பதாக தோன்றும்.

இதன் கிளைசிமிக்ஸ் இண்டக்ஸ் குறைவாக இப்பதால், உடனடியாக ரத்த சர்க்கரையை அதிகரிக்காது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட், பிளபாய்ட்ஸ் வீக்கத்தை குறைக்கும். இதனால் தீவிரமான நோய்கள் ஏற்படாது.

இதில் இனிப்பு அளவு சற்று அதிகம் இருப்பதால், ஒட்டுமொத்தமாக கார்போஹைட்ரேட் அளவு எவ்வளவு எடுத்துக்கொண்டீர்கள் என்பதை கவனிக்க வேண்டும். குறைந்த அளவில் கார்போஹைட்ரேட் எடுத்துக்கொள்ளும் நாளில் பேரிக்காய்யை சேர்த்துகொள்ளுங்கள். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் பெருந்தும்.