உக்ரைனை ஹைப்பர் சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்திய ரஷியா

490
Advertisement

உக்ரைன் ,ரஷிய படைகள் இடையே தீவிர போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் , உக்ரைன் மீது ரஷியா நேற்று அதிநவீன ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது . உக்ரைன் ராணுவ தளங்களை ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததாக ரஷியா தெரிவித்திருந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை கொண்டு ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைனின் மைஹொலெவ் மாகாணம் கொஸ்ட்யன்நிவ்கா என்ற பகுதியில் குடியிருப்பு பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ள உக்ரைன் ராணுவத்திற்கு எரிபொருள் சேமிப்பு கிடங்கை குறிவைத்து அதிநவீன ஹின்ஷல் என்ற ஹைப்பர் சோனிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.