மனிதன் மீது பாய்ந்த முதலை..! வைரல் வீடியோ

340
Advertisement

அமெரிக்க யூடியூபர் மற்றும் மிருகக்காட்சிசாலை ஒன்றை நடத்தி வருவருமான ஜே ப்ரூவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

பொதுவாக , முதலைகள் மிகவும் கனமான ஊர்வனவாகும், ஏனெனில் அவை அரை டன் (454 கிலோகிராம்) எடையும் 11.2 அடி (3.4 மீட்டர்) நீளம் வரை வளரும்.

ஜே ப்ரூவர் பகிர்ந்துள்ள வீடியோவில் , பெரிய முதலை ஒன்று அவர் மீது குதித்து கீழ தள்ளி அவர்மீது ஊர்வது போல உள்ளது . ஆனால் அந்த முதலை அவரை சாப்பிடவோ கொல்லவோ முயற்சிக்கவில்லை.

https://www.instagram.com/p/CbNeLadFTZ9/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

டார்த் கேட்டர் என்ற பெரிய ஆண் முதலை தன்னை பராமரிக்கும் ஜே மீது பாசத்துடன் பாந்து அவரை திக்குமுக்காடச் செய்தது. அவர் கீழே விழுந்துவிட, அவர் உடலை முழுவதும் மறைத்தவாறு அணைத்துக் கொண்டது முதலை.

பின் அந்த முதலைமீது தன் அன்பை வெளிப்படுத்தும் அவர் அந்த முதலையை தட்டிக்குடுத்துக்க , முதலை அவர் மீதிருந்து கீழே இறங்கிவிடுகிறது.

மிருகக்காட்சிசாலையின் பராமரிப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் பெரும்பாலும் தங்கள் விலங்குகளை அன்புடன் பராமரிப்பதும் , அச்சமின்றி அவற்றுடன் விளையாடுவதும் வழக்கமான ஒன்றாகும் .