இந்த மாதிரி முதுகு வலிக்குதா… உடனே மருத்துவரை பாருங்க

226
Advertisement

விளையாட்டு போட்டிகள்ல தீவிர பயிற்சி எடுக்குறவங்க, சண்டை பயிற்சிகள்ல ஈடுபடுறவங்க இவங்களுக்கு மட்டும் இல்லாம சாதாரணமா பள்ளி கல்லூரிகளுக்கு போய்ட்டு வர்ற மாணவர்களுக்கு முதுகுவலி ஏற்படுறது ரொம்பவே பரவலான நிகழ்வா மாறிட்டு வருது. வயசான பிறகு வர்ற இந்த வலிகளெல்லாம் இளம் வயதினருக்கு வர என்ன காரணம் இதை தடுக்குறதுக்கு என்ன செய்யணும் இதை பத்தி தான் இந்த வீடியோவில விரிவா பாக்க போறோம்.

முதுகுவலியால பாதிக்கப்படுற 80% மக்களுக்கு இருக்குறதுக்கு பேர் Mechanical backpain’ன்னு சொல்லப்படுது. அதாவது, டெஸ்ட் எடுத்து பார்த்தா இவங்களுக்கு தனிப்பட்ட மற்ற பிரச்சினைகள் எதுவும் இருக்காது. இந்த மாதிரியான backpain வர்றதுக்கான முக்கியமான இரண்டு காரணங்கள் என்னன்னா, ரொம்ப நேரம் உட்க்காந்து இருக்குறது. அடுத்தபடியா, சரியான positionல உக்காராம இருக்குறது.

ஒரு சிலருக்கே முதுகெலும்பு டிஸ்க் சம்பந்தமானது மற்றும் ஜவ்வு கிழிதல் மாதிரியான பிரச்சினைகள்னால வலி ஏற்படலாம். laptop இல்லன்னா computer முன்னாடி உக்காந்து வேலை செய்யும் போது, திரையில தெரியுற முதல் வரிக்கு நேரா உங்க கண்ணு இருக்க மாதிரி உங்க sitting position இருக்கனும்.

கீழ்முதுகுக்கும் நாற்காலிக்கும் இடையே இடைவெளி இருக்கக் கூடாது. கைகளுக்கு சரியான support கிடைக்கணும். அதேமாதிரி computerஓட keyboard, mouse, மணிக்கட்டு ஆகிய மூணும் ஒரே வரிசைல இருக்கணும்.

அதிகமான தூரம் தினமும் இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுறவங்களுக்கும் முதுகுவலி வர்றது ரொம்பவே common. பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் முதுகுவலியை குறைக்க 2010ஆம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்ட (யார் பரிந்துரை செய்தது?) விதிப்படி, மாணவர்கள் தங்களோட எடையில் 10 சதவீத எடையை மட்டுமே புத்தகப் பை எடையா சுமந்து போகணும். புத்தகப்பையை ரெண்டு பக்கமும் மாட்டணும். இதுனால ஒரு பக்கம்  சுமை ஏறும் வகையில இருக்குறது தவிர்க்கப்படும். நிறைய பேர் முதுகுவலி மற்றும் கழுத்து வலிக்காக belt ஒன்னு போட்டுட்டு தங்களோட வேலையை தொடர்ந்து செஞ்சுட்டே இருப்பாங்க. இந்த பெல்ட் உண்மையிலேயே எப்படி வேலை செய்துன்னு பாத்தா, தசை செய்ற வேலையை பெல்ட் செஞ்சுட்டு இருக்கும். ஆனா, இப்படி பெல்ட்டையே தொடர்ந்து யூஸ் பண்ணிட்டு இருக்கும் போது தசை மீண்டும் வலுவடையாது. வலி தீவிரமாக இருக்கும்போது மட்டுமே பெல்ட் யூஸ் பண்ணிட்டு, வலி குறைஞ்ச பிறகு மருத்துவர் பரிந்துரைக்குற சிகிச்சைகள் மற்றும் உடற்பயிற்சிகளை எடுத்துக்கிட்டா தான் தசை மறுபடியும் வலுப்பெற்று அதோட இயல்பான வேலையை செய்ய தொடங்கும். நீண்ட நாட்களாக இருக்கும் முதுகுவலி மற்றும் முதுகுவலி கால் வரைக்கும் பரவுறது, மரத்து போறது,  எடையிழப்பு, காய்ச்சல், பசியின்மை போன்ற அறிகுறிகள் இருந்தா மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மிதமான தொடர் முதுகுவலிகளுக்கு physiotherapist கிட்ட தேவையான பயிற்சிகள் பெற்று பலன் பெறலாம். மற்றபடி அப்பப்ப வந்துட்டு போற முதுகுவலிக்கு சூழலியல் மாற்றங்களை செஞ்சாலே பெரிய வித்தியாசத்தை உணர முடியும். அதாவது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் உக்காந்து இருக்குற positionஅ மாத்தணும். உடலை சுறுசுறுப்பா வச்சுக்குறது, தேவையான ஓய்வு என இரண்டையும் சமச்சீரா பராமரிக்குறது முதுகுவலி பிரச்சினைல இருந்து விரைவில் தீர்வு காண உதவும்.

-ஷைனி மிராகுலா