கிண்டி குதிரைப் ரேஸ் இன்று துவங்குகிறது

392
Advertisement

ஆறு வருடத்துக்கு பிறகு, இந்தியாவின் தலைசிறந்த குதிரைகள் பங்கெடுக்கும் குதிரை பந்தயம் சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் இன்று துவங்கவுள்ளது.

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாபெரும் போட்டியானது சுழற்சி முறையில் 6 ஆண்டுக்கு ஒரு முறை சென்னையில் நடைபெறும். அதன் படி சென்னையில் இன்றும் (சனிக்கிழமை) நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைப்பெறுகிறது .இந்த போட்டியை காண குதிரை ரேஸ் பிரியர்கள் ஏராளமானோர் உற்சாகத்துடன் வருகைதந்த வண்ணம் உள்ளனர் .

இன்றும் ,நாளையும் சென்னை, மும்பை, கொல்கத்தா, மைசூர், உள்ளிட்ட 6 நகரங்களில் இருந்து தலைசிறந்த குதிரைகளும், வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இதில் வெற்றி பெறும் குதிரைக்கு 17 கிலோ வெள்ளி கோப்பை பரிசளிக்கப்படுகிறது.
மேலும் 49 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணமும், கோப்பையும் பரிசாக அளிக்கப்படுகிறது. மொத்தமாக நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் பரிசாக வழங்கப்படவுள்ளது.