8 மாநிலங்களில் Popular Front Of India நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் மீண்டும் சோதனை

212

உத்தரபிரதேசம், குஜராத், மகாராஸ்ட்ரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் Popular Front Of India நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் மீண்டும் சோதனை நடைபெறுகிறது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் NIA எனும் தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் அமலாக்கத்துறையினர் Popular Front Of India நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் இது தொடர்பான விசாரணையில் வெளிநாடுகளில் இருந்து NRI-க்கள் மூலம் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனைக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

தேச பாதுகாப்பு கருதி இந்த சோதனை நடத்தப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் உத்தரபிரதேசம், குஜராத், மகாராஸ்ட்ரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் Popular Front Of India நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் மீண்டும் சோதனை நடைபெறுகிறது. ஏற்கனவே அமலாக்கத்துறை, NIA அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், தற்போது மாநில போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.