137 நாட்களுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை .. இன்னும் எவ்வளவு உயர்த்தப்பட வாய்ப்பு இருக்கிறது?

276
Advertisement

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சுமார் 137 நாட்களுக்குப் பின்னர் முதல்முறையாக மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் போர் தொடங்கிய பின்னர் கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலரை நெருங்கியது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்பட்ட போதிலும், இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை கடந்த 4 மாதங்களாகவே உயர்த்தப்படவில்லை. இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் 4 (தீபாவளி அன்று) பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியும்  குறைக்கப்பட்டது.

சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் உயரும் போது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை சுமார் ரூ.0.52 உயர்த்தப்பட வேண்டும். கடந்த முறையை உடன் ஒப்பிடும் போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் கிட்டத்தட்ட $37 அதிகரித்துள்ளதால், நஷ்டங்களைச் சமாளிக்கக் குறைந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையையும் லிட்டருக்கு ரூ.19 உயர்த்த வேண்டியிருக்கும். இருப்பினும், கச்சா எண்ணெய் விலையுடன் ஒப்பிடும் பெட்ரோல் டீசல் மதிப்பு அதிகம் என்பதால் சுத்திகரிப்பாளர்களால் விலை வித்தியாசத்தைச் சற்று அதிகமாகவே சமாளிக்க முடியும்.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிகளையும் மத்திய அரசு குறைக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.