கோவையில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகள் குளமாக மாறியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் பலத்த சூறைக்காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது…

228
Advertisement

கோவையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

கோவை ஆர்.எஸ்.புரம், சின்னவேடம்பட்டி, காட்டூர், கவுண்டம்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், உக்கடம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. பலத்த காற்று காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னர், கிக்கானிக் பள்ளி மேம்பாலம் ஆகிய மேம்பாலங்களுக்கு அடியில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டு, மழைநீரை அகற்றும் பணியில், மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Next கோவையில் கனமழையின் போது, பலத்த சூறைக்காற்று வீசியதால், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. காற்றுடன் கூடிய கனமழை காரணமாக, ரேஸ்கோர்ஸ், ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் சாலையோரம் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதையடுத்து மரங்களை வெட்டி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது