இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

380

தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில, இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை, குத்தாலம், மங்கைநல்லுார் உள்ளிட்ட இடங்களில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளில் 2 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையே, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.