நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிதிஷ்குமார், உத்தவ் தாக்கரே, சரத் பவார் ஆகியோரை மும்பையில் சந்தித்து பேசினார்….

77
Advertisement

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.

அதன்படி, மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை நிதிஷ்குமார் சந்தித்தார். அகிலேஷ் யாதவுடன் சேர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் சந்தித்தார். அண்மையில், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை நிதிஷ்குமார் சந்தித்தார்.

மேலும், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனையும் சந்தித்துப் பேசினார். இந்நிலையில் மும்பை சென்ற நிதிஷ்குமார், உத்தவ் தாக்கரே, சரத் பவார் ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டால், பா.ஜ.க-வை வீழ்த்த முடியும் என்று தெரிவித்தார். நாட்டின் நலன் கருதி அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.