‘இதை’ மட்டும் கிளிக் செய்யாதீர்கள்.. வாடிக்கையாளர்களுக்கு வங்கி எச்சரிக்கை ! 

    376
    Advertisement

    கொரோனா காலகட்டத்திற்கு பின் டிஜிட்டல்  பேமெண்ட் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது.அதேவேளையில் டிஜிட்டல் மோசடிகளும் அதிகருத்துவருகிறது.இந்நிலையில், HDFC வங்கி  தன் வடிக்கைளார்கள் கவனமாக இருக்க அறிவுத்துளைகளை வழங்கி உள்ளது.

    அதன்படி,  பான் கார்டு விவரங்களைப் புதுப்பிக்கக் கேட்கும் தெரியாத இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்யவேண்டாம்.

    வங்கியின் இணையதளம் போல  SMS மூலம் இணைப்புகள் குறித்து கவனமாக இருக்கவேண்டும். தனிப்பட்ட அடையாள எண் (PIN),கடவுச்சொல் (OTP) போன்ற பாதுகாப்பான எண்களை முன்பின் தெரியாத இணைப்புகள் மூலம் தகவல்கள் கேட்கப்பட்டால், அவற்றை நிரப்பவேண்டாம்.

    இது போன்ற தருணத்தில் சந்தேகம் இருந்தால் உடனே வங்கிக்குத் தெரியப்படுத்துங்கள் இணையதள விவரங்களைக் கவனமாகச் சரிபார்க்கவும், குறிப்பாக உங்களின் நிதி தொடர்பான விபரங்களை உள்ளிட வேண்டிய இடங்களில் கூடுதல் கவனம் தேவை.

    பாதுகாப்பான கடவுச்சொற்களை உள்ளிடுவதற்கு முன் இணையதளத்தில் முகவரியில் https பாதுகாப்பு அடையாளத்தைக் கொண்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். எழுத்துப் பிழைகளுக்கு மின்னஞ்சல்களில் பெறப்பட்ட URLகள் மற்றும் டொமைன் பெயர்களைச் சரிபார்க்கவும். சந்தேகம் இருந்தால் உடனே வங்கியைத் தொடர்புகொண்டு, புகார் அளிக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.