இப்படியும் ஒரு கல்யாணம்!

186
Advertisement

குஜராத்தை சேர்ந்த ஷாமா பிந்து தன்னை தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்ததில் இருந்தே நாடு முழுவதும் ஒரு புறம் ஆதரவு இருந்தாலும் பரவலான எதிர்ப்பு கருத்துக்களும் வந்த வண்ணம் இருந்தன.

எதிர்ப்புகள் அதிகமாக இருந்ததால், வீட்டிலேயே திருமண சடங்குகளை முடித்து கொண்டார். 40 நிமிடம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அவரின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே வந்திருந்தனர்.

மற்ற பெண்களை போல திருமணம் முடிந்த பின் தான் வீட்டை விட்டு போக வேண்டியதில்லை என்பது மகிழ்ச்சியளிப்பதாக ஷாமா தெரிவித்துள்ளார்.

Advertisement