2022-23-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

523
Advertisement

வருவாய் பற்றாக்குறை இருக்கின்றபோதும், வரி அதிகரிப்போ, கட்டண உயர்வோ இல்லாமல் 2022-23ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் 2022-23-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக்கல்வித்துறைக்கு சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் வழங்க 19 ஆயிரம் கோடி ரூபாயும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 17 ஆயிரத்து 901 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வீட்டு வசதித்துறைக்கு 8 ஆயிரத்து 700 கோடியும், பொது விநியோக திட்டத்திற்கு 7 ஆயிரத்து 500 கோடியும், நீர்பாசன திட்டத்திற்கு 3 ஆயிரத்து 384 கோடி ரூபாய் என முக்கிய துறைகளுக்கு பட்ஜெட்டில் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.