உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் சூழலில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.ரஷ்யாவின் இந்த அத்துமீறலான போர் நடவடிக்கை உலகின் பல்வேறு நாடுகளையும் ஆத்திரப்படுத்தியது. ரஷ்யாவைத் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி உலகின் பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன . மேலும் 2022 கால்பந்து உலகக் கோப்பையில் இருந்து ரஷ்யா நீக்கப்படுவதாகச் சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிபா அறிவித்துள்ளது.ரஷ்ய அணிகள் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து சர்வதேச கால்பந்து தொடர்களில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஃபிபா தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .
ரஷ்யாவுக்கு சம்மட்டி அடி ….ரஷ்ய அணியை உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து நீக்கி FIFA உத்தரவு
Advertisement