நாட்டுப்புறக் கலைஞர்கள் நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

340
Advertisement

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்கப்படுத்த ரூ.10,000 வீதம் 500 கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது . இதற்கு விண்ணப்பிபவர்கள் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தவராகவும், பதிவினை புதுப்பித்தவராகவும் இருத்தல் வேண்டும்.

31.03.2022-ல் 18 வயது நிரம்பியவராகவும், 60 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.விண்ணப்பங்களை, செயலாளர்,தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை – 600 028 என்ற முகவரிக்கு வரும் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.