உயர் CHOLESTEROLஐ காட்டி கொடுக்கும் 5 அறிகுறிகள்! கவனிக்காவிட்டால் கவலைக்கிடம்

183
Advertisement

அதிகமான நொறுக்குத் தீனி, மதுப்பழக்கம், குறைவான உடல் செயல்பாடு மற்றும் முறையற்ற வாழ்க்கைமுறை உடலில் தேவைக்கு மிஞ்சிய cholesterol சேர காரணமாக அமைகிறது.

பெரிதாக இடையூறு ஏற்படும் வரை பலரும் cholesterolஐ கண்டுகொள்வதில்லை.

Cholesterol அதிகமாவதை காட்டும் சில அறிகுறிகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

கால்களில் அடிக்கடி வலி ஏற்பட்டு நடக்கும் போது தீவிரமடைந்தால், அது இரத்த குழாய்களில் அடைக்கும் கொழுப்புகளால் இருக்கலாம்.

உள்ளங்கை மற்றும் முழங்கையில் மஞ்சள் நிறமாக தென்பட்டால் அது அதிகரிக்கும் cholesterolஐ காட்டி கொடுக்கும் முக்கிய அறிகுறியாகும்.

இதே போன்ற மஞ்சள் நிறம் தோலின் எந்தப் பகுதியிலும் கண்களுக்கு அருகேயும் தோன்றக் கூடும். திடீரென கால்கள் சில்லென்று போவது மற்றும் மரத்து போவதற்கும் உடலில் சேரும் கூடுதல் கொழுப்பு காரணமாக இருக்கக் கூடும்.

நகங்கள் தடிமனாகி மிகவும் மெதுவாக வளர்வதும் உயர் cholesterol அளவுகளினால் ஏற்படும் என்பதால் இது போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதோடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவதும் அவசியம் ஆகிறது.