செல்லப்பிராணியுடன் வழிபட்டு தளத்திற்குள் சென்ற நபர் மீது  FIR

381
Advertisement

உத்தராகாண்ட்  மாநிலம்,கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது கேதார்நாத் கோயில்.இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும்.

இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம்,இந்நிலையில் பிரபல ஊடகவியலாளர் ஒருவர்   தன் செல்லப்பிராணி உடன் கேதார்நாத் கோவிலுக்குள் சென்றத்துக்கு அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து , சமூக ஊடகங்களில் பலர் சம்மந்தப்பட்ட பிரபல ஊடகவியலாளர் மற்றும் அவரது  செல்லப்பிராணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.அதேநேரத்தில் சிலர் இந்த செயல், உலகெங்கிலும் உள்ள மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறுகிறார்கள்.தன் செல்லப்பிராணியுடன் அவர் கோவிலில் தரிசனம் செய்யும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.