திரைப்பட இயக்குநரும், நடிகருமான மனோபாலா உடலுக்கு நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்…

135
Advertisement

திரைப்பட இயக்குநரும், நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மனோபாலவின் உடலுக்கு, நடிகர்கள் விஜய், சித்தார்த், கவுண்டமணி மற்றும் இயக்குநர்கள் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மனோபாலவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரைபிரபலங்கள், அவருடனான தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.