செங்கல்பட்டு அருகே போலி மருத்துவர் கைது

485

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிபவர் வனத்தையன். இவர் கடப்பாக்கம் பகுதியில் ஆய்வு பணி மேற்கொண்ட போது, சிவா என்பவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு அப்பகுதியில்  உள்ள பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்துள்ளார்.

இது குறித்து சூனாம்பேடு காவல் நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வனத்தையன் கொடுத்த புகாரின் பேரில், போலி மருத்துவர் சிவாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.