போர் எதிரொலி : கச்சா எண்ணெய் விலை உயர்வு… இந்தியாவிலும் தாக்கம் ஏற்படுத்துமா ?

300
Advertisement

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தொடர்ந்துள்ளதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் சுமார் 7 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 7.57 டாலர் அதிகரித்து 118 டாலரில் வர்த்தகமாகிறது. உக்ரைன் மீது தற்காலிக போர் நிறுத்தம் எந்த முன்னேற்றத்தையும் தரவில்லை என தெரிவித்துள்ள ரஷ்யா, மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு தடை விதித்தால் சர்வதேசச் சந்தையில் அதன் விலை 150 டாலர் வரை உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.