உடல் பருமனை குறைக்கும் ஐந்து Weight Loss பானங்கள்! 

191
Advertisement

உயர் இரத்த அழுத்தம், சக்கரை நோய், இதய நோய் பாதிப்பு, கொழுப்பு அளவு உயர்தல், பக்கவாதம் போன்ற பல நோய்களுக்கு முக்கிய காரணியாக அமைவது கட்டுப்படுத்தப்படாத உடல் பருமன்.

அவசர கால வாழ்க்கைமுறையில், ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்கும் ஐந்து வகையான இயற்கை பானங்களை பற்றி இத்தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

ஒன்றரை கப் அன்னாசி பழங்களோடு இரண்டரை டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் சிலோன் பட்டை பொடி மற்றும் கருப்பு உப்பு தேவைக்கேற்ப சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது உடல் எடை குறைப்பை ஊக்குவிக்கிறது.

ப்ரோமெலைன் (Bromelain) எனும் உட்பொருள் கொண்ட அன்னாசி பழம் செரிமான கோளாறுகளை சரி செய்வதோடு வீக்கத்தை குறைத்து நீரிழப்பையும் சமன் செய்கிறது.

சிலோன் பட்டை அதிகமான பசியை குறைத்து சக்கரை அளவுகளை சீராக்குகிறது. விட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் அடங்கிய எலுமிச்சை நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

புதினா சேர்த்த க்ரீன் டீ உட்கொள்ளும் உணவுகளை விரைவாக செரிமானம் ஆக உதவி, உடல் எடை குறைப்பில் பங்களிக்கிறது. குறிப்பாக, க்ரீன் டீயில் உள்ள caffiene வயிற்றுக் கொழுப்பை கரைக்க வெகுவாக உதவுகிறது.

பால் சேர்க்காத coffeeயில், flaxseed பொடி சேர்த்து கலக்கி, கடைசியாக துருவிய டார்க் சாக்லேட் சேர்த்து பருகும் போது coffeeயில் உள்ள chlorogenic acid உடல் எடை குறைப்பை தீவிரப்படுத்துவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

நார்ச்சத்து மிகுந்த ஆரஞ்சு போல காட்சியளிக்கும் சிட்ரஸ் பழமான grapefruit பசியை கட்டுப்படுத்துவதோடு நீண்ட நேரத்துக்கு நிறைவான உணர்வை அளிப்பதால் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கால் கப் மாதுளை, முக்கால் கப் grapefruit, தேன்  மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து பருகுவதால் அஜீரண சிக்கல்கள் சரியாவதோடு உடலுக்கு தேவையான B Complex விட்டமின்களும் கிடைக்கிறது.

ஒரு இன்ச் இஞ்சி வேர், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு கப் குளிர்ந்த நீர், முக்கால் டீஸ்பூன் வறுத்த சீரக பொடியை சேர்த்து அரைத்து குடிப்பது வாயு தொடர்பான பிரச்சினைகளை சரி செய்து குடலை சுத்தம் செய்வதால் குறிப்பிடத்தக்க உடல் எடை குறைப்பு சாத்தியப்படும் என உணவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.