அய்யய்யயோ ஆனந்தமே…நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே…

234
Advertisement

இந்தியாவில் வழக்கமாக மே மற்றும் ஜூன் மாதங்களின்தான் வெப்ப அலை வீசும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே வெப்ப அலை வீசத் தொடங்கிவிட்டது.நடப்பாண்டின்  மார்ச் மாதத்தின் சராசரி வெப்பநிலை, கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 45 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது.மக்கள் பாதுகாப்பக  இருக்க சம்பத்தப்பட்ட மாநில அரசுகளும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்டுவருகிறது.

மக்கள் வெப்பத்தை எதிர்கொள்ள இளநீர் ,பழச்சாறு போன்ற குளிர்ச்சியானவைகளை எடுத்துக்கொள்கின்றனர்.இந்நிலையில் இணையத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று,மனதை குளிரச் செய்துள்ளது.

அதில்,வீட்டின் செல்லப்பிராணி ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று வெப்பம் தாங்காமல் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கும் அண்டா ஒன்றில் குதித்து,மூழ்கி விளையாடிகிறது.செல்லப்பிராணியின் இந்த குளியல் பார்ப்போரை மீண்டும் மீண்டும் பார்க்கசெய்துள்ளது.