டிவியில் மறைந்த கரடியை படுக்கை அறையில் தேடிய வளர்ப்பு நாய்

537
Advertisement

வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கக்கூடியவை நாய்கள்.மனிதர்களின் உணர்வுகளை கூட அவைகளால் உணரமுடிக்கும். இரண்டு வயது குழைந்தையின் அறிவுத்திறனுக்கு ஈடானது நாய்களின் அறிவுத்திறன் என்று ஆய்வில் சொல்லப்பட்டு உள்ளது.

நாய்கள் செய்யும் குறும்புத்தனமான வீடியோ இணையத்தில் குவிந்துள்ளன . அதுபோன்ற மற்றொரு வீடியோ தற்போது இணையவாகிகளை ரசிக்க வைத்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில் ,

வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்று தன் உரிமையாளர் உடன் டிவி பார்த்துகொண்டு உள்ளது. டிவியில் கரடி ஒன்று அதன் குட்டிகள் உடன் உள்ளது. இதனை டிவி முன் நின்றபடி இண்டெர்ஸ்ட்டாக பார்த்துகொண்டுருக்கும் பொது கரடியின் குட்டிகள் விளையாடியபடி அங்கும் இங்கும் ஓட , ஒரு கட்டத்தில் தாய் கரடியும் அங்குள்ள ஓர் வீட்டின் நடைபாதையில் நடந்து சென்றுவிட்டது.

https://www.instagram.com/p/CbqNG24grUI/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

கேமராவில் இருந்து மறைந்த அந்த கரடியை கவனித்த நாய் , கரடி டிவி பின் உள்ள படுக்கை அறைக்கு சென்றுவிட்டதாக நினைத்து , முதலில் டிவியில் பின் பார்க்கிறது , அதை தொடர்ந்து படுக்கையறைக்கு சென்று பார்த்துஉள்ளது. நாய் குழம்பிபோய் கரடியை தேடும் தருணம் ரசிக்கவைத்துள்ளது.

இதனை படம் பிடித்துகொண்டுருக்கும் தன் உரிமையாளர் சிரித்துக்கொண்டு இருக்க அந்த நாய் இன்னும் குழம்பி விட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ள இந்த வீடியோவிற்கு பலரும் தங்கள் காமெண்ட்களை செய்துவருகின்றனர்.