யாருக்கெல்லாம் டோல்கேட்டில் கட்டணம் கிடையாது தெரியுமா.. சலுகை பெற எப்படி அப்ளை செய்யனும் தெரியுமா?

177
Advertisement

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி யாருக்கெல்லாம் கட்டணம் கிடையாது, எப்படி டோல்கேட்டில் சலுகை பெறுவது என்பதை இப்போது பார்ப்போம்.

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் (நான்கு வழிச்சாலைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட இருவழிச்சாலைகள்) ஒவ்வொரு 50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் தூரத்திற்குள் ஒரு சுங்கச்சாவடி (டோல்கேட்) அமைக்கப்பட்டுள்ளது. அந்த சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் அந்த பகுதியை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதேநேரம் சுங்க கட்டணத்தை இப்போது பணமாக வசூலிப்பது வெகுவாக குறைந்துவிட்டது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை ரொக்கமாக வாங்கும் நடைமுறை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ரொக்கமாக வாங்கும் போது போக்குவரத்து தாமதங்கள் ஆகிறது. சிக்னலில் நீண்ட நேரம் வாகனங்கள் நிற்கும் நிலை இருந்தது.

இதை குறைக்கும் முயற்சியில் RFID- அடிப்படையிலான FASTag உடன் மின்னணு டோல் கலெக்சனை (ETC) செயல்படுத்தியுள்ளது. இதன்படி அனைத்து கார்களும் FASTag பாதைகள் வழியாக பணம் செலுத்தாமல், செல்வத்தை குறிப்பிடுகிறது . இதனால் சிக்னல்களில வேகமான வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. பாஸ்டேக் மூலம் வங்கிகளில் இருந்து நேரடியாக கட்டணம் செலுத்தப்படுகிறது. அதாவது செல்போனுக்கு ரிசார்ஜ் செய்வது போல பாஸ்டேக்கில் கட்டணம் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் கழிக்கப்படுகிறது.

அதேநேரம் பாஸ்டேக்கில் இருந்து சில வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள், 2008ன் விதி 11-ன் படி, “பயனர் கட்டணம் செலுத்துவதில் இருந்து சில வாகனங்களுக்கு விலக்கு” தரப்பட்டது. அதேநேரம் கட்டணத்தில் விலக்கு என்றாலும் ட ஃபாஸ்டேக்குகள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.