தீபாவளி பண்டிகை: கவலையில் மக்கள்

311

மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால், இந்தாண்டு பட்டாசு விலை 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது. வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிக்கை கொண்டாடப்பட உள்ளது. ஆண்டிற்கு  பட்டாசு உற்பத்தி மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த நிலையில், சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. சிவகாசியில் ஆயிரத்து 100 ஆலைகளில் 3 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் இந்தாண்டு பட்டாசு விலை 30 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தாண்டு டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதாலும், தமிழகத்தில் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாலும் பட்டாசு உற்பத்தி 30 சதவிகிதம் குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.