கோப்பையை வென்ற கையோடு மருத்துவமனையில் அட்மிட் ஆகும் தோனி! சோகத்தில் ரசிகர்கள்…

155
Advertisement

குஜராத் டைட்டன்ஸை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக IPL கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

இந்த சீசன் IPL போட்டிகள் தொடங்கிய போதே பயிற்சி ஆட்டம் ஒன்றில் தோனிக்கு முட்டியில் காயம் ஏற்பட்டது.

இந்த தொடரில் விளையாடுவாரா என்ற கேள்விகளுக்கு, தன்னுடைய சிறப்பான ஆட்டத்தையே பதிலாக அளித்தார் தோனி. முட்டிக்கான பிரத்யேக strappings அணிந்து 16 மேட்ச்கள் விளையாடிய தோனி, இந்த வாரம் மும்பையில் உள்ள கோகிலாபென் (Kokilaben) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தோனி மருத்துவமனையில் தங்கி முட்டிக்கு தேவையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் எடுத்துக் கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு சீசன் ரசிகர்களுக்காக விளையாட விருப்பம் தெரிவித்துள்ள தோனிக்கு காயம் ஏற்பட்டது சோகம் அளித்தாலும், அவர் நிச்சயம் வலுவாக மீண்டு வருவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.