தொங்கு பாலம் ஆற்றில் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு

313

குஜராத்தில் தொங்கு பாலம் ஆற்றில் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்பு மிக்க சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக பழமைவாய்ந்த தொங்கு பாலம், மாச்சூ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த பாலத்தில், புனரமைப்பு பணிகள் முடிந்து, கடந்த 5 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. நேற்று விடுமுறை என்பதால், ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பாலத்தின் மீது ஏறி, ஆற்றின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென பாலம் அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது.

பாலத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் தண்ணீரில் தத்தளிப்படி அபய குரல் எழுப்பினர். பாலத்தில் தொங்கி கொண்டிருந்தவர்கள் ஆற்றில் விழுந்தனர். நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். கரையில் இருந்தவர்கள், தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.