பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் – தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆய்வு

388

பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வரும் 27 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.


கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிந்ததை அடுத்து அங்கு கலவரம் வெடித்தது. பள்ளியை சூறையாடிய போராட்டக்காரர்கள், பள்ளி வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு வாகனங்களை தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் குறுித்து காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரயங்க் கானுன்கோ தலைமையிலான குழு வரும் 27 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் ஆய்வு நடத்துகிறது.