திருப்பூரில் குண்டும் குழியுமான சாலை பொதுமக்கள் படும் அவதி…

207
Advertisement

திருப்பூர் மாநகராட்சி உட்பட்ட 28 வது வார்டு, மகாலட்சுமி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக இப்பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டதில் சாலைகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் முடிவடைந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை சேதமடைந்ததாக சாலையை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், சாலையானது முழுவதுமாக சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதை எடுத்து அப்பகுதியை சேர்ந்த சிலர் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரி செய்ய கற்களை கொட்டியதாக கூறப்படுகிறது.

இந்த பகுதியில் பெரிய பின்னல் ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் முதல் சிறுகுரு பின்னல் ஆடை நிறுவனங்கள் என ஏராளமான நிறுவனங்கள் இப்பகுதியில் இயங்கி வருகின்றன. அதேபோல் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

மேலும் இப்பகுதியில், சாலை ஒன்று உள்ளது என்பதே தெரியாத நிலை இருந்து வருவதால், குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து செல்லும் பெற்றோர்கள் பலர் இவ்வழியே வரும்போது விபத்துக்குள்ளாகி உள்ளதாக கூறுகின்றனர் அப்பகுதியை சேர்ந்த மக்கள்.

அதுமட்டுமின்றி தினமும் இச்சாலையில் நான்கு ஐந்து விபத்துக்கள் நிச்சயம் ஏற்பட்டு விடும் என ஆதங்கப்படும் இப்பகுதி பொதுமக்கள், கடந்த ஒன்றரை வருடங்களாக இப்பகுதியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலரிடம் முறையிடும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையுகம் எடுக்கப்படவில்லை என்கின்றனர் அப்பகுதி குடியிருப்புவாசிகள்.

இன்று நாளை என்று காலம் கடத்தி ஒரு ஆண்டு காலம் கடந்து விட்டதாகவும், விபத்துகளால் உயிர்பலி ஏற்பட்ட பின்னரே மாமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுதப்பியுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தினர் இதன் அவசியத்தை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் தரமான சாலையை அமைத்து தர வேண்டும் என்றும், இனியும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாமன்ற உறுப்பினர் காலம் கடத்தும் பட்சத்தில், இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகை இது போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்களை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

-ஜெரி