Mouse-ஐ போன் என நினைத்து “ஹெலோ” சொன்ன குழந்தையின் கியூட் வீடியோ

240
Advertisement

பொதுவாக கணினித்துறையில் பணிபுரிபவர்கள் வீடுகளில் கணினி இருப்பது இயல்பே.அதே வீட்டில் குழந்தை ஒன்று இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.குழந்தைகள் எப்போதும் துறுதுறுவென இருப்பார்கள்.

அவர்களின் சுட்டித்தனம் தான் வீட்டில் உள்ளவர்களுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருக்கும்.இது போன்று  குழந்தைகளின் ரசிக்கும்படியான வீடியோக்கள் இணையத்தில் குவிந்துள்ளன. தற்போது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று வைராக்கி வருகிறது.  

அதில்,தந்தை வீட்டில் உள்ள கணினி முன் உட்காந்து பணி செய்துகொண்டு இருக்கிறார்.தந்தையை  விடாமல் விளையாடுவதற்கு கியூட்டாக வம்பு செய்த அவரின் சுட்டி பெண் குழந்தையை தூக்கி தன் மடியில் உட்காரவைத்துக்கொண்டார்.பின், கணினியை காட்டி அதைப்பற்றி தன் மகளுக்கு கற்றுக்கொடுக்கிறார்.

கணினியின் திரையை காண்பிக்கிறார்,அடுத்து  கி போர்டை காட்டுகிறார் ,அதில் உள்ள பட்டன்களை  அமுக்கி மகிழ்ந்த குழந்தைக்கு, அடுத்தபடியாக அருகில் உள்ள மவுசை காணப்போகிறார்.குழந்தையின் கையை எடுத்து அதன் மீது வைக்கிறார்.

குழந்தையோ  மவுசை ஏதோ மொபைல் போன் என நினைத்து தன் கையில் எடுத்த  மவுசை காதில் வைத்து “ஹெலோ” என்கிறது.குழந்தையின் இந்த செய்யலை கண்டு குழந்தையின் தந்தை ரசித்தபடி சிரிக்கிறார்.

குழந்தையின் இந்த செயல் அவரின் தந்தையை மட்டும் அல்ல இணையத்தில் அனைவரையும்  கவர்ந்துள்ளது.குழந்தையின் இந்த கியூட்டான செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.