அந்தமான்-நிகோபார் தீவுக்கு சுற்றுலா போக திட்டமிட்டு உள்ளவர்கள் கவனத்திற்கு ..!

462
Advertisement

வங்கக் கடலில் நீந்திக் கொண்டிருக்கும் அழகிய அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு ஆண்டு துவக்கத்தில் செல்வது சுற்றுலாவுக்கான மகிழ்ச்சிக்கு மிகவும் ஏற்றது.

வாழ்வில் மகிழ்ச்சியான தருணத்தை இங்கு செலவிடுவது மறக்கமுடியாத அனுபவத்தை தரக்கூடியதாக உள்ளது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் இருந்து சுற்றுலா செல்லும் பயணிகள் எண்ணிக்கை சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் , அந்தமான்-நிகோபார் தீவுக்கு அருகே வங்க கடலில் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. அது புயலாக உருவாகி அந்தமான்-நிகோபாா் பகுதிகளை தாக்கும் அபாயம் உள்ளது.

இதன் காரணமாக , அந்த பகுதிகளில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் வருகிற 22-ந் தேதி வரை மூடப்பட்டுள்ளன. எனவே அந்தமான்-நிகோபாா் தீவுக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து , சென்னை விமான நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது . அதில் அந்தமான்-நிகோபார் தீவில் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, சுற்றுலாவுக்காக அந்தமான் செல்லும் பயணிகள் தங்களுடைய பயணத்தை வரும் 22-ந் தேதி வரை தவிர்ப்பது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.