மனித மாமிசத்தை சாப்பிட்ட தம்பதிகள்

308

கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு, மனித மாமிசத்தை சாப்பிட்ட விவகாரத்தில். சிறப்பு விசாரணைக் குழு அமைத்து குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில், தர்மபுரியைச் சேர்ந்த 2 பெண்கள் கொடூரமான முறையில் நரபலி செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை உலுக்கும் இந்த நரபலி சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

வேலை வாங்கி தருவதாக கூறிய இடைத்தரகர் ஒருவர் இருவரையும் அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், மசாஜ் சென்டர் நடத்தி வரும் லைலா – பகவந்த் சிங் தம்பதியினர், அந்த பெண்களை நரபலி கொடுத்துள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, இரு பெண்களின் உடல்களை துண்டு, துண்டாக வெட்டி, வீட்டிலேயே புதைக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சிறப்பு விசாரணைக் குழு அமைத்து குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது