சென்னை விமான நிலைய புதிய முனையத்தின் தரைகளில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான கோலங்கள் பயணிகளை கவர்ந்துள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன புதிய விமான முனையங்களை கட்டும்பணி நடைபெற்று வருகிறது. தற்போது சுமார் 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிக்கட்ட வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
புதிய அதிநவீன முனையத்தில் பயணிகள் ஓய்வறைகள், ஷாப்பிங் மால்கள் உள்பட பல்வேறு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சூரிய வெளிச்சத்திற்காக ஸ்கை லைட் சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலைய புதிய முனையத்தின் உள்புற சுவர்கள் மற்றும் தரைகளில் தமிழக, இந்திய கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் ஓவியங்கள், கோலங்கள் வரையப்பட்டுள்ளன.