தனது பிறந்த நாள் விழாவை எளிமையாக கொண்டாட கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

288
Advertisement

தனது பிறந்த நாள் விழாவை எளிமையாக கொண்டாட கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

மார்ச் 1 தனது பிறந்தநாளன்று ஆடம்பரம் இல்லாமல் மக்களுக்கு பயனுள்ள வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள்’’ என்று திமுகதொண்டர்களுக்கு முதல்வர்ஸ்டாலி்ன அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மார்ச் 1-ல் என்னுடைய பிறந்தநாள். எனது பிறந்தநாளையொட்டி, நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டகூடாது . மக்களுக்கு பயன் தரும் நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள். அறிவுப் புரட்சிக்கு வித்தாகும் புத்தகங்களை வழங்குங்கள். வருங்கால தலைமுறைக்கு நம் லட்சியங்களை சொல்லும் வகையில் புதிய உறுப்பினர்களைச் சேருங்கள். திராவிட மாடல் அரசின் 9 மாதகால ஆட்சியின் சாதனைகளை விரிவாக எடுத்துரையுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார் .