தமிழக கவர்னரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார்

249
Advertisement

தமிழக கவர்னர் RN ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார் . நீட் விலக்கு மசோதாவை 2 வது முறையாக நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது .

வரும் 18 ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கவர்னர்-முதலமைச்சர் இடையிலான சந்திப்பு நடைபெற்றுள்ளது . மேலும், கொரோனா பாதிப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன .கவர்னரை முதல் அமைச்சர் சந்தித்த அதே வேளையில், தமிழக கவர்னரை உடனடியாக மாற்றவேண்டும் என்று மக்களவையில் திமுக எம்.பி.க்கள் டி.ஆர் பாலு உள்ளிட்டோர் முழக்கமிட்டு வருகின்றனர்.