கீழே விழுந்த பழங்களை ஓடி ஓடிபோய்  பிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்த குழந்தைகள்

249
Advertisement

மனிதனுக்கே உரிய  சிறப்பு குணங்கள்  மறைந்துவிட்டது  என்போது போல உலகில் ஏதோ ஒருமூளையில் துரதிஷ்டமான சம்பவங்கள் நிகழ்ந்துவிடும்.அதே நேரத்தில் மனிதநேயம்,பாசபரிமாற்றம் உள்ளிட்ட குணங்களை  வெளிப்படுத்தும் அழகான நிகழ்வுகளும் அவ்வோப்போது நிகழ்கிறது.

குழந்தைகளிடம் மட்டுமே அணைத்து நற்குணங்களையும் நாம் காணமுடியும்.இதனை நிரூபிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பலரின் இதயங்களை வென்று வருகிறது.

சீனாவின் தெரு ஒன்றில்,நபர் ஒருவர் பழங்களுடன் சக்கரம் பொருத்திய வண்டி ஒன்றை தள்ளிச்சென்றபோது போது.ஒரு கட்டத்தில் அதை வளைக்க  முயற்சித்தார்,ஆனால் நிலைதடுமாறி அந்த சக்கர வண்டி கீழே கவிழ்ந்து விட,

அதில் வைக்கபட்டுருந்த பழங்கள் அனைத்தும் தெருவில் உருண்டோடியது.இதை அருகில் சைக்கிளில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் கவனிக்கின்றனர்.பின்பு ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அவர்களே தங்கள் சைக்கிள்களை கீழே போட்டுவிட்டு ஓடிவந்து,தெருவில் உருண்டோடும் பழங்களை ஓடி ஓடிச்சென்று  பிடித்து அந்த நபரிடம் ஒப்படைகின்றனர்.குழந்தைகளின் இந்த செயல் இணையத்தில் இதங்களை வென்றுவருகிறது.