உங்க குழந்தைங்க பாப்கார்ன் சாப்பிடுறாங்களா? பெற்றோரே அலர்ட்

849
Advertisement

சோளம் ஆரோக்கியமான உணவு தான். அப்ப அதுல இருந்து தயாரிக்கப்படுற பாப்கார்னும் ஆரோக்கியமானது தானேன்னு ஒரு கேள்வி வருது. ஆனா, குழந்தைங்களுக்கு பாப் கார்ன் அதிகமா தராதீங்க என்பதே உணவியல் நிபுணர்களோட பரவலான அறிவுரையா இருக்கு. பாப் கார்ன் உண்மையில ஆரோக்கியமானதா? குழந்தைகளுக்கு பாப் கார்ன் கொடுக்குறது சரியா? 

உண்மையிலேயே ஆரோக்கியமான snacks தான். இது மட்டும் இல்லாம பாப்கார்ன்ல VitaminB, மக்னீசியம், துத்தநாகம் மாதிரியான அத்தியாவசிய சத்துக்களும் கூட பாப்கார்ன்ல இருக்கு. பாப் கார்ன் ஆரோக்கியமா  இருக்குறதும் ஆரோக்கியத்துக்கு கெடுதலா மாறுறதும் அது தயாரிக்கப்படுற முறையில தான் தீர்மானம் ஆகுது.

எண்ணெய், வெண்ணெய், உப்பு மற்றும் அதிகப்படியான sesaonings சேர்க்காத வரைக்கும் பாப்கார்னால எந்தக் கெடுதலும் கிடையாது. ஆனா, சாதாரணமா theatreல படம் பாக்க போறவங்கள விட பாப்கார்ன் சாப்பிட போறவங்க தான் அதிகம்னு சொல்லலாம். Theatreல படங்களுக்கு intermission விடும்போது கிட்டத்தட்ட 80% மக்கள் வாங்கிட்டு வர்ற snacks எதுன்னா அது பாப்கார்னா தான் இருக்கும். அதுலயும் குழந்தைங்கலாம் சொல்லவே வேணாம்.

இதுபோன்ற பாப்கார்னை தான் விரும்பி சாப்பிடுவாங்க. இப்படி theatreல விற்கப்படுற பாப்கார்ன்ல அதிகப்படியான எண்ணெய், வெண்ணெய் மற்றும் வசீகரிக்கும் வாசனை கொண்ட sesaonings சேக்கப்பட்டு இருக்கும். இப்படிப்பட்ட சில seasoningsல செயற்கை நிறமிகளும் கூட சேர்க்கப்பட்டு இருக்கலாம்.

இப்படி ஏகப்பட்ட கலோரிகளை ஒரே நேரத்துல சாப்பிடும் போது உடல்ல சக்கரை மற்றும் கொழுப்பு அளவுகள் வெகுவாக உயரக் கூடும். குழந்தைகளுக்கு சின்ன வயசுல புடிச்சு போற சுவைக்கு பிற்காலத்துல அவங்க அந்த வகை உணவையே திரும்ப திரும்ப சாப்பிடத் தூண்டும். இதன் விளைவாக உடல் பருமன் மற்றும் பல இணை நோய்களை ஏற்படக் கூடும். இதனால குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய உணவு விஷயத்துல பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

குழந்தைகளை பொறுத்தவரை கொழுப்பு சேக்கபடாத பாப்கார்ன்களை சாப்பிடலாம். அது மட்டும் இல்லாம சுகாதாரமான கடைகள்ல வாங்குறது ரொம்பவே முக்கியம். அதுலயும் எந்த வயசுக் குழந்தைக்கு பாப்கார்னை கொடுக்குறாங்க அப்படின்றதையும் கவனத்துல வைக்கணும்.

காரணம், ரொம்ப சின்ன குழந்தைகளுக்கு பாப்கார்ன் தொண்டையிலயே சிக்கிக் கொள்ளும் அபாயமும் இருக்கு அப்படின்றதால மென்னு விழுங்க தெரிஞ்ச குழந்தைகளுக்கு மட்டும் செயற்கை சுவையூட்டிகள் அதிகம் இல்லாத பாப்கார்ன் மட்டுமே தரலாம். எதையுமே அளவுக்கு மீறி சாப்பிடாம மிதமான அளவுல எடுத்துக்குறதோட, சரிவிகித உணவுல காய்கறிகள் மற்றும் பழங்களையும் சேத்துக்குறது ரொம்பவே அவசியம் என்பதே உணவியல் நிபுணர்களின் கருத்தா இருக்கு.