சென்னை மெட்ரோ பணி: OMR ரோட்டுல இப்போ இல்லையாம்… எப்போ தெரியுமா..?

143
Advertisement

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

நாள்தோறும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து, 61 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பில் மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தற்போது, 3வது வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணை – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஐடி நிறுவனங்கள் அதிகமுள்ள ஓஎம்ஆர் சாலை இந்த வழித்தடத்தில் தான் உள்ளது. இந்த பகுதியில் சுரங்கப்பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருவான்மியூரில் நிலத்தடிக்குள் ரயில் நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஓஎம்ஆர் சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் இருப்பதால் மெட்ரோ கட்டுமான பணி தொடங்குவதில் சிக்கல். அப்பகுதியில் சுரங்கப்பாதை பணிகளை தொடங்க போக்குவரத்து நெரிசல் பெரும் சவாலாக உள்ளது. பணிகள் தொடர்ந்தால், அங்குள்ள குறுகிய பாதையில் அதிகளவு வாகனங்கள் செல்லும் சூழல் ஏற்படும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன செய்தி தொடர்பாளர் கிரிராஜன், திருவான்மியூரில் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்காக ஓஎம்ஆர் சாலையில் குறுகிய பகுதியில் வாகனங்கள் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருவான்மியூரில் நிலத்தடி செங்குத்து பாதை அமைப்பதற்காக சுரங்கம் தோண்டும் பணி அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.