ஆன்லைன் மூலமாகவே பான் கார்டில் இருக்கும் திருத்தங்களை எவ்வாறு செய்வது என்பது குறித்த விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடிமகனின் வருமான வரி கணக்கு தாக்கல், வங்கி கணக்கு தொடங்குதல், கடன் வாங்குதல் என அனைத்து முக்கிய தேவைகளுக்கும் பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. பான் கார்டில் உங்களது பெயர் தவறாக இருந்தால் உடனடியாக அதனை திருத்தம் செய்ய வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாகவும் பான் கார்டில் இருக்கும் திருத்தங்களை செய்து கொள்ளலாம். தற்போது எப்படி ஆன்லைன் மூலமாக பான் கார்டில் பெயரை திருத்தம் செய்வது என்பது குறித்து இங்கு காணலாம்.
முதலில் https://www.incometaxindia.gov.in/ என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று பான் கார்டு சேவை என்பதை கிளிக் செய்யவும். பின்னர், பான் கார்டில் திருத்தம் செய்வதை கிளிக் செய்து உங்களது பான் கார்டு எண்ணை பதிவு செய்யவும். அதன் பின்னர், புதிய பக்கம் திறக்கப்படும். அதில் பான் கார்டில் நீங்கள் என்னென்ன திருத்தங்கள் செய்ய வேண்டுமோ அதை இங்கே நிரப்ப வேண்டும். இதன் பின்னர், ஆதார் கார்டு அல்லது முக்கிய ஆவணங்களின் ஸ்கேன் செய்த நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் பின்னர், நீங்கள் பெயரை மாற்றம் செய்வதற்கான கட்டணத்தை செலுத்தி சமர்ப்பித்தால் பான் கார்டில் திருத்தங்கள் செய்யப்பட்டு விடும்.
-சலோமி