ஆதார் என்பது தனிமனிதனின் முக்கிய அடையாள ஆவணமாகும்.அரசு நலத்திட்ட உதவிகள் ஆகட்டும் அல்லது அரசு , தனியார் துறையை சார்த்த நிறுவங்கள் ஆகட்டும் ஆதார் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
அதே வேலையில்,பொதுமக்களின் ஆதார் தரவுகளை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு அவ்வப்போது அறிவிப்புகளை கொடுத்துவருகிறது.இந்நிலையில் மக்கள் தங்கள் ஆதார் அட்டையின் புகைப்பட நகலைத் தவறாகப் பயன்படுத்தக்கூடிய எந்தவொரு நிறுவனத்துடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளது மத்திய அரசு.
மே 27 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், UIDAI யிடமிருந்து பயனர் உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஒரு நபரின் அடையாளத்தை நிறுவ ஆதாரை பயன்படுத்தலாம்.
அதேவேளையில் , ஹோட்டல்கள் அல்லது திரைப்பட அரங்குகள் போன்ற உரிமம் பெறாத தனியார் நிறுவனங்கள் ஆதார் அட்டைகளின் நகல்களை சேகரிக்கவோ வைத்திருக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. அது ஆதார் சட்டம் 2016 இன் கீழ் குற்றமாகும்.
ஒரு தனியார் நிறுவனம் உங்கள் ஆதார் அட்டையைப் பார்க்கக் கோரினால் அல்லது உங்கள் ஆதார் அட்டையின் நகலைப் பெற விரும்பினால் , UIDAI யிடமிருந்து சரியான பயனர் உரிமம் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையின் புகைப்பட நகலைச் சமர்ப்பிப்பதற்கு மாற்றாக, பயனர்கள் UIDAI இணையதளத்தில் இருந்து ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கு எண்கள் மட்டும் தெரியும் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து உபயோகித்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.