நான்கு காதுகளுடன் கண்டெடுக்கப்பட்ட “அபூர்வ பூனை”

42
Advertisement

நாய்களுக்கு அடுத்தபடியாக வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணி  பூனைகள் தான்.மனிதனின் உணர்வுகளை உணர்ந்து செயல்படும் திறன்கொண்டது பூனை.இந்நிலையில்,இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்றில் நான்கு காதுகளை கொண்ட பூனை ஒன்று அனைவரையும் ஆசிரியத்தில் ஆய்திவருகிறது.

வசீகரமான தோற்றம்கொண்ட இந்த பூனை வீட்டின் கொல்லைப் புறத்திலிருந்து ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் பூனையின்  உரிமையாளர்.ஆரம்பத்தில்  இந்த பூனை உடல் வலு இல்லாமல் சோர்வாக காணப்பட்டதாகவும்,நாட்கள் கடந்துசெல்ல பூனை பார்ப்பதற்கே வசீகரமாக மாறிவிட்டதாக கூறுகிறார் அதன் உரிமையாளர்.

இவரை மட்டும் அல்ல ,நெட்டிசன்களையும் தன் வசீகர தோற்றதால் ஈர்த்துவருகிறது இந்த மிடாஸ்.இணையத்தில் பகிர்ந்த வீடியோ உடன்   “வணக்கம், நான் 4 காதுகளுடன் பிறந்த முழுமையான ஆரோக்கியமான பூனை. கேட்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை ” என பகிரப்பட்டது.

Advertisement