நேருக்கு நேர் மோதிய பஸ்கள்

311

பாம்பன் பாலம் அருகே, அரசுப் பேருந்தும் தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில்  8 பேர் காயமடைந்தனர். சென்னையிலிருந்து தனியார் சொகுசு ஆம்னி பேருந்து ராமேஸ்வரம் நோக்கிசென்று கொண்டிருந்தது. அந்த ஆம்னி பேருந்து பாம்பன் பாலம் அருகே சென்றபோது, அரசுப்பேருந்து மீது நேருக்கு நேர் மோதி, பாம்பன் பாலம் அருகே உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி கடலில் வீழ இருந்தது.ஆம்னி பேருந்து ஓட்டுநர், பேருந்தை சாதுரியமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்தில், ஆம்னி பேருந்து ஓட்டுநர் உள்பட அரசு பேருந்தில் பயணித்த 7 பேர்  காயமடைந்தனர்.  தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.