உள்ளூர் இரயிலில் சோலோவாக பயணித்த காளை -வைரலாகும் வீடியோ

138
Advertisement

பல வினோதமான சம்பவங்கள் இணையத்தில் தாள்தொறும் உலா வருகிறது.இதற்கிடையில்,ஜார்கண்டில் நடந்த வினோத சம்பவத்தை பகிர்ந்துள்ளார் பத்திரிகையாளர் ஒருவர்.அவர்  பகிர்ந்து ட்விட்டர் பதிவில்,உள்ளூர் மின்சார இரயில் ஒன்றில் காளை மாடுதனியாக பயணிக்கிறது.

இது குறித்து இரயிலில் இருந்த ஒரு பயணியிடம் கேட்டபோது,குறிப்பிட்ட ஒரு இரயில் நிலையத்தில் பத்து பேர் கொண்ட கும்பல் ஒன்று,இந்த மாட்டை இரயிலில் ஏற்றி இருக்கையின் கம்பியில் கட்டிவிட்டு,உள்ளே சில பயணிகளிடம்,மாட்டை கடைசி இரயில் நிலையத்தில் இறக்கிவிடுமாறு கேட்டுக்கொண்டு சென்றுவிட்டனர் என தெரிவித்துள்ளார்.

காளை கட்டப்பட்டிருக்கும்  பெட்டி காலியாக காட்சி அளிக்கிறது.இந்த வீடியோவில் பார்க்கும் நெட்டிசன்கள் இரயில்நிலைய காவல்துறை என்ன செய்துகொண்டு இருக்கிறது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement