பஸ் வரும் வரை… குட்டி டான்ஸ்

421
Advertisement

பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பது பலருக்கும் சலிப்பை உணரச்செய்யும். இதற்காகவே சிலர் ஆட்டோ போன்ற மற்ற வாகனத்தில் பயணிப்பது வழக்கம்.

இங்கு ஒருத்தர் பேருந்து வருவத்துக்கு தாமதம் ஆனதால் அவர் செய்த காரியம் பலரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.

இணையத்தில் பகிரப்பட்டுஉள்ள வீடியோ ஒன்றில் , ஒரு நபர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக வெகு நேரம் காத்துகொண்டு உள்ளார். பேருந்து வருவதற்கு தாமதம் ஆனதால் நடனம் ஆட தொடங்கி விட்டார்.

அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் , அந்த வழியாக செய்பவர்களை பற்றி கவலை படாமல் ஒருவித நடனத்தை ஆடுகிறார். இதனை எதிரில் இருந்து படம் பிடித்த ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .

அதில் ,

வீடியோ எடுத்தது நான்தான்! இது வைரலாகி மக்களை சிரிக்க வைத்துள்ளது. இந்த பையன் என் ஜிம்மிற்குச் செல்கிறான், உலகில் எந்த அக்கறையும் இல்லாமல் அவன் சுதந்திரமாக இருப்பதையும் வாழ்க்கையை முழுவதுமாக அனுபவித்து மகிழ்கிறான் என்று பதிவிட்டுள்ளார்.

மற்றவர்களை பற்றி கவலை படாமல் ரசித்த படி இவர் நடனம் ஆடும் தருணம் பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது . பலரும் இவரின் செயலை ரசித்து பகிர்ந்து வருகின்றனர்.